Thursday, June 12, 2008
ஏக்கம்...
என் நெஞ்சில் ஒரு ஏக்கம்...என்ன என்று தெரியாமலே ஒரு ஏக்கம்...என் வாழ்க்கையின் பாதை சரியா தவறா, எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த பாதை பலர் செல்லாத பாதை...என் வாழ்க்கையே ஒரு தோழ்வி என்று உல்கம் சொல்கிறது அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என் மனம்...
Saturday, May 31, 2008
Wednesday, October 17, 2007
நெஞ்சத்தை தொடும் தைவான்...
இன்றுடன் நான் தைவான் வந்து பதினொரு நாட்கள் ஆகிவிட்டன...இது வரைக்கும் பிடித்திருக்கிறதா??? ஒரு வகையில் பிடித்திருக்கிறது. இது எனக்கு தெரிந்த உலகத்தை விட புதிதானது...இங்கு ஆங்கிலதின் ஆதிக்கம் குறைவு. ஆனால் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூற முடியாது. அதன் பயன்பாடு குறைவு என்று கூறலாம். இந்த மாறி இடங்களுக்கு வரும் போதுதான் அங்கிலம் ஆதிக்கம் இல்லாது உலகம் இருக்கிறது என்று புரிகிறது...ஒரு பக்கத்தில் என் தமிழ் பற்று ஏங்குகிறது...இந்தியர்களும் இப்படி இருக்க கூடாதா என்று... மற்றொரு பக்கத்தில் கால ஓட்டத்துக்கு முன்னே இது எல்லாம் சாத்தியமா என்று தோன்றுகிறது...இதில் எது முக்கியமானது என்று எனக்கு தெரியவில்லை...அதன் பதிலையும் நான் தேடவில்லை...இப்பொழுது தைவானின் அழகை ஆராய வந்திருக்கும் ஒரு கவிஞன் நான்...
Thursday, January 25, 2007
கோபம்
பாரதியின் கோபம் கவிதை
பாரதியின் கோபம் புரட்சி
காந்தியின் கோபம் மாற்றம்
காந்தியின் கோபம் விடுதலை
என் கோபம்???
பாரதியின் கோபம் புரட்சி
காந்தியின் கோபம் மாற்றம்
காந்தியின் கோபம் விடுதலை
என் கோபம்???
Tuesday, October 03, 2006
பாலுக்கும் கள்ளுக்கும் ஒரே நிறம்...
சென்ற வாரம் நான் சிங்கப்பூருக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இந்தியா கடைக்கு சாப்பிடப் போனேன்...என்ன சாப்பிடுவதென்று தெரியவில்லை கொஞ்ச நேரம் அங்கே நின்றேன்...பிறகு ஆப்பம் கண்ணில் தென்பட்டது...பார்பதற்கு தேங்காய் பால் ஆப்பம் போல் இருந்தது. எனக்கு அது மிகவும் பிடிக்கும், ரெண்டு வாங்கினேன் மகிழ்ச்சியுடன் மேசையில் சென்று அமர்ந்தேன் வாயில் கொஞ்சம் வைத்தேன்...என்ன அதிர்ச்சி ஆப்பம் இனிக்கவே இல்லை..எனக்கு தெரிந்த ஆப்பம் எல்லாம் இனிக்கும்...பெறும் எமாற்றம். என்னை அங்கு கூட்டி சென்ற நன்பனிடம் சொல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் சொல்லவில்லை...இன்னொரு வாய் எடுத்து வைத்தேன்...இதற்கு மேல் அதை சாப்பிட எனக்கு மனமில்லை. அங்கு கூட்டி சென்ற நன்பனை அடிக்கனும் போல் தோன்றியது.. என் நன்பனை ரெண்டு திட்டு திட்டு விட்டு அவனிடம் கூறினேன்...என் வாழ்க்கையில் இனிக்காத தேங்காய் பால் ஆப்பத்தை இன்று தான் சாப்பிடுகிறேன்...என்ன கொடுமை...
Monday, August 07, 2006
பாரதிதாசன்
நான் இன்று பாரதிதாசனின் கவிதைகள் புத்தக்த்தை வாங்கினேன். அவர் கவிதைகளை பாடலாக கேட்டிருக்கிறேன் ஆனால் எனக்கு தெரிந்தது மிகச் சிலவே. வாங்கியாதும் நான் அவருடைய தமிழ் பற்றிய கவிதைகளை படித்தேன்...என் மனதில் ஒரு கேள்வி...இவன் பாரதிதாசனா இல்லை தமிழ்-தாசனா???
Thursday, April 20, 2006
மரணம்...பிரிவு...
மரணம் என்பது ஒரு உயிருக்குத் தான் உறவுக்கு அல்ல...அன்று ஒரு திரைப்படதில் இந்த வரியை கேட்டேன், இது உண்மையா என்று எனக்கு தெரியாது ஆனால் இது உண்மையாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது... அதே பிரிவுக்கும் பொருந்துமா??? பொருந்தும் என்று நினைக்கிறேன்...இது என் நம்பிக்கையா இல்லை எதிர்பார்ப்பா?
Subscribe to:
Posts (Atom)