Tuesday, October 03, 2006

பாலுக்கும் கள்ளுக்கும் ஒரே நிறம்...

சென்ற வாரம் நான் சிங்கப்பூருக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இந்தியா கடைக்கு சாப்பிடப் போனேன்...என்ன சாப்பிடுவதென்று தெரியவில்லை கொஞ்ச நேரம் அங்கே நின்றேன்...பிறகு ஆப்பம் கண்ணில் தென்பட்டது...பார்பதற்கு தேங்காய் பால் ஆப்பம் போல் இருந்தது. எனக்கு அது மிகவும் பிடிக்கும், ரெண்டு வாங்கினேன் மகிழ்ச்சியுடன் மேசையில் சென்று அமர்ந்தேன் வாயில் கொஞ்சம் வைத்தேன்...என்ன அதிர்ச்சி ஆப்பம் இனிக்கவே இல்லை..எனக்கு தெரிந்த ஆப்பம் எல்லாம் இனிக்கும்...பெறும் எமாற்றம். என்னை அங்கு கூட்டி சென்ற நன்பனிடம் சொல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் சொல்லவில்லை...இன்னொரு வாய் எடுத்து வைத்தேன்...இதற்கு மேல் அதை சாப்பிட எனக்கு மனமில்லை. அங்கு கூட்டி சென்ற நன்பனை அடிக்கனும் போல் தோன்றியது.. என் நன்பனை ரெண்டு திட்டு திட்டு விட்டு அவனிடம் கூறினேன்...என் வாழ்க்கையில் இனிக்காத தேங்காய் பால் ஆப்பத்தை இன்று தான் சாப்பிடுகிறேன்...என்ன கொடுமை...

Monday, August 07, 2006

பாரதிதாசன்

நான் இன்று பாரதிதாசனின் கவிதைகள் புத்தக்த்தை வாங்கினேன். அவர் கவிதைகளை பாடலாக கேட்டிருக்கிறேன் ஆனால் எனக்கு தெரிந்தது மிகச் சிலவே. வாங்கியாதும் நான் அவருடைய தமிழ் பற்றிய கவிதைகளை படித்தேன்...என் மனதில் ஒரு கேள்வி...இவன் பாரதிதாசனா இல்லை தமிழ்-தாசனா???

Thursday, April 20, 2006

மரணம்...பிரிவு...

மரணம் என்பது ஒரு உயிருக்குத் தான் உறவுக்கு அல்ல...அன்று ஒரு திரைப்படதில் இந்த வரியை கேட்டேன், இது உண்மையா என்று எனக்கு தெரியாது ஆனால் இது உண்மையாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது... அதே பிரிவுக்கும் பொருந்துமா??? பொருந்தும் என்று நினைக்கிறேன்...இது என் நம்பிக்கையா இல்லை எதிர்பார்ப்பா?

Monday, February 27, 2006

from a friend with love...

வசந்தங்கள் காத்திருக்கின்றன உன் வருகைக்காக...
மலர்கள் காத்திருக்கின்றன உன் மகுடதிற்காக...
பல வெற்றிகள் காதிருக்கின்றனஉன் பார்வைக்காக...
நான் மட்டும் காத்திருக்கிறேன்உன் வரவுக்காக...
நீ தொட்டு விடும் தூரத்தில் தான்தொடு வானம்...